சினிமாத்துறையில் சாதிக்க நினைக்கும் பலருக்கும் குறும்படம் நல்ல பாதையாக அமைந்திருக்கிறது. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி மோகன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் கூட இந்த பாதை வழியாகத்தான் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்கள்.
இவர்கள் வழியில் வெள்ளித்திரையில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக நடிகர் விஜித் இயக்கு, நடித்து தயாரித்துள்ள குறும்படம் தான் ‘ஹாப்பி நியூ இயர்’.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான விஜித், இக்குறும்படத்தை திரைப்படம் போல இயக்கியிருப்பதோடு, அதிகப்படியான பொருட்ச்செலவிலும் இக்குறும்படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த குறும்படத்தை விஜய் சேதுபதிக்கு விஜித் போட்டுக் காட்டியிருக்கிறார். படத்தை பார்த்த விஜய் சேதுபதி, படத்தின் பின்னணி இசை, படத்தொகுப்பு ஆகியவை பிரமாதமாக இருந்ததாக பாராட்டியதோடு, படத்தில் விஜித்தின் தோற்றம் அருமையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...