‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து விமலுக்கு பல பட வாய்ப்புகள் வந்திருக் கொண்டிருக்க, அவரது நடிப்பில் உருவாகும் ‘கன்னி ராசி’ படம் விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கிறது. இதில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்க, இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கிங் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுத, கலா மற்றும் விஜி நடனம் அமைக்கின்றனர்.
காதல் கதையாக இருந்தாலும், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைக்களத்தை அமைத்திருக்கும் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன், படம் குறித்து கூறுகையில், “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால், விமல் மட்டும் பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில், விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்துக் கொள்ள, அதன் பிறகு நடப்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறேன். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களிடம் வரவேற்பு பெறுவது நிச்சயம்.” என்றார்.
இப்படத்தை தயாரித்து வரும் கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம், பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கும் மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...