உலக அளவில் பிரபலமான திரைப்பட இயக்குநர்களில் மஜித் மஜீதி முக்கியமானவர். ஈரான் நாட்டைச் சேர்ந்த இவரது படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது இந்தி படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஈரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜீதி இயக்கும் முதல் படமான இப்படத்திற்கு ‘பியாண்ட் தி க்ளவுட்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை நேசிக்கும் செண்டிமெண்ட்ஸ்களை கொண்டு உருவாகியுள்ள இப்பத்தின் இசையும், டிரைலரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வாழ்வின் அழகியலையும், சிறு சிறு சுவாரஸ்ய நினைவுகளையும் பேசும் இப்படம் குறித்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுஜய் குட்டி கூறுகையில், “இப்பட வெளியான பிறகு இந்தியாவில் மஜீத்திற்கு ரசிகர்கள் அதிகமாவார்கள் என உணர்கிறேன். மஜீத்தின் படத்தை வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைத்து நாடுகளிலும் ஒரே நேரத்தில் இப்படத்தை வெளியிடுவது
மிகவும் சவாலாகவுள்ளது. இந்த முயற்சிக்கான வரவேற்பு மிக பெரிய அளவில் கிடைக்கும் என நம்புகிறேன். பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் மனநிலையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய கனவுகளுடன் திரியும் 22 வயது அமிர், தவறான வழியில் செல்ல, அவனைக் காப்பாற்ற முற்படும் அவனது சகோதரி, இதற்காக போலீசால் கைது செய்யப்படும் கதாநாயகி தாரா, இதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதாக 'பியாண்ட் தி க்ளவுட்ஸ்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு கதாபாத்திரத்தின் சாராம்சத்தை உணர்வுகளுடன் வெளிப்படுத்தியுள்ளார் மஜீத்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...