ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பெயரிடப்பாத படத்தை ‘விஜய் 62’ என்று அழைக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது.
இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைப்பெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியானது. இது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், இது போல இனி நடக்காமல் இருக்கு படக்குழுவினருக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் புதிய கட்டுப்பாடு விதித்திருக்கிறாராம்.
அதன்படி, விஜய் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளும் நபர்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்களாம். ஏற்கனவே, இப்படத்திற்காக நடத்தப்பட்ட போட்டோ ஷூட் காட்சிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படப்பிடிப்பு காட்சிகள் வெளியானதால், படக்குழுவினர் ரொம்பவே எச்சரிக்கையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...