சினிமாவில் நடிகைகளுக்கு எப்படி பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறதோ அதுபோல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் மற்றும் தொகுப்பாளினிகளுக்கும் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே, சிலர் தாங்கள் பணிபுரியும் தொலைக் காட்சிகளில் இருந்து வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சினிமாவில் காமெடி வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் தேவதர்ஷினி, பிரபல சேனல் ஒன்றில் காமெடி நிகழ்ச்சில் ஒன்றில் நடித்து வந்தார். சுமார் 300 எபிசோட்களை கடந்த இந்த நிகழ்ச்சியில் இருந்து தேவதர்ஷினி, திடீரென்று விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவதர்ஷினியின் இந்த முடிவுக்கு பின்னால் எத்தகைய பிரச்சினை இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அவரே தான் சேனலில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
இது குறித்து கூறிய தேவதர்ஷினி, “ஒரு மாற்றத்திற்காக தான், சின்ன பிரேக் தேவைப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அது என் குடும்ப சேனல் தான், எப்போது வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்.” என்று கூறியுள்ளார்.
தேவதர்ஷினி, தற்போது தமிழ் சினிமாவைப் போல, தெலுங்கு சினிமாவிலும் ஏகப்பட்ட வாய்ப்புகளை பெற்று வருகிறாராம். அங்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதால் அவர் டிவியில் பணியாற்றுவதில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...