விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக இருந்த டிடி, தற்போது தனது தொகுப்பாளினி பணிக்கு சற்று ஓய்வுக்கொடுத்துவிட்டு திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், விஜய் டிவியை விட்டு போன டிடி, தற்போதும் மீண்டும் வந்திருக்கிறார், ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சிக்காக. ஆம், விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளான கிங்ஸ் ஆஃப் டான்ஸ் போட்டியின் பைனல் நிகழ்ச்சியை தான் டிடி தொகுத்து வழங்கியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதியும் பங்கேற்றுள்ளார். இவர்களுடன் பிந்து மாதவி, வரலட்சுமி சரத்குமார், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி, ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...