கடந்த ஆண்டு தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினிகாந்த், அரசியலில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாவட்டம் வாரியாக தனது மன்றத்திற்கு நிர்வாகிகளை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இருந்தாலும், அவரது கட்சி மற்றும் சின்னம் போன்ற விபரங்கள் எப்போது அறிவிக்கப்படும் என்று அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நடிகர் கமல் தனது கட்சி பெயர் மற்றும் சின்னத்தை வெளியிட்டு, தனது கட்சியின் பொதுக்கூட்டத்தையும் மதுரையில் நடத்தி முடித்துவிட்டார். அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில் நடத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கமல் கட்சியின் பெயரை அறிவித்தது போல, ரஜினிகாந்தும் தனது அரசியல் கட்சி பெயரை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது புதிய படத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டது அவரது ரசிகர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘காலா’, ‘2.0’ ஆகியப் படங்கள் வெளியாக உள்ள நிலையில், அரசியலில் ஈடுபட்டிருக்கும் ரஜினிகாந்த், கட்சி மற்றும் சின்னம் அறிவிப்பு குறித்து எந்த விபரமும் சொல்லாமல், புதிய படம் நடிப்பதில் கவனம் செலுத்தியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
முன்பெல்லாம் ரஜினி புதிய படம் அறிவித்தால் சந்தோஷப்படும் அவரது ரசிகர்கள், இந்த முறை வருத்தப்படுவதோடு, “அவரை நம்பி நாம் வந்தால், அவர் புது புது முடிவை எடுக்கிறாரே, என்னத்த செய்யப் போகிறாரோ” என்றும் புலம்புகிறார்களாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...