விஜயா குழும மருத்துவமனைகள் மற்றும் (விஜயா மருத்துவ பிரிவு & கல்வி அறக்கட்டளை) சார்பில் நேற்று ஒரு மிக பிரம்மாண்டமான விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் இந்தியாவின் துணை ஜனாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கையா நாயுடு, தமிழ்நாட்டின் ஆளுநர் மரியாதைக்குரிய திரு.பன்வரிலால் ப்ரோஹிட் அவர்கள் முன்னிலையில் ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களின் தபால் முத்திரை வெளியிடப்பட்டது. இந்த மாபெரும் விழாவில் சுகாதார துறை மற்றும் சினிமா துறையின் பல மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களை பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது.
தபால் முத்திரை இந்தியாவின் துணை ஜனாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கய்யா நாயுடு அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநர் மரியாதைக்குரிய திரு. பன்வரிலால் ப்ரோஹிட் அவர்கள் 'தி லெஜண்ட் - ஸ்ரீ B .நாகி ரெட்டி' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகம் நாகி ரெட்டி அவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களின் ஒரு தொகுப்பு ஆகும். இந்த புத்தகத்தை மறைந்த ஸ்ரீ .B வேணுகோபால் ரெட்டி (திரு. நாகி ரெட்டி அவர்களின் மகன்) அவர்களால் தொகுக்கப்பட்டது. திருமதி. B பாரதி ரெட்டி (விஜயா மருத்துவமனை அறங்காவளர் & தலைமை நிர்வாக அதிகாரி) அவர்கள் இந்த புத்தகத்தை தொகுப்பதற்கு உதவி செய்துள்ளார் .
இந்தியாவின் துணை ஜனாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கய்யா நாயுடு அவர்கள் திரு.B நாகி ரெட்டி அவர்கள் சமுதாயத்திற்கு செய்த பங்களிப்புகளை பற்றி உரையாற்றினார். மேலும் திரு.B நாகி ரெட்டி அவர்களால் உருவாக்கப்பட்ட விஜயா குழும மருத்துவமனையை வழிநடத்தி கொண்டிருக்கும் நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.
சென்னையில் உள்ள கிரீன்பார்க் ஹோட்டலில் இந்த மாபெரும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...