தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய எதிரியாக திருட்டு விசிடி விளங்குகிறது. இந்த திருட்டி விசிடி-யை ஒழிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக திரையரங்குகளில் கேமரா வைத்து திருட்டு விசிடி தயாரிக்கப்படுவதாக சமீபத்தில் வெளியான ‘மனுஷனா நீ’ திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸாலி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கஸாலி கூறுகையில், “இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவரக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு உரிமை, மற்ற மாநிலங்களில் திரையிட உரிமை என்று எதுவும் கொடுக்காமல், தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் மட்டும் வெளியிட்டேன். ஆனாலும், தியேட்டரில் கேமரா வைத்து எடுத்து நெட்டில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்துள்ளனர்.
1பாரன்சிக் வாட்டர்மார்க் கொண்டு எந்த தியேட்டர், எத்தனை மணிக்கு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது, என்ற விபரங்கள் வெகு விரைவில் கிடைக்கும். கிடைத்தவுடன் அந்த தியேட்டர் மீது போலீஸில் புகார் கொடுக்கவும், வழக்குத் தொடுக்கவும், முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து இடங்களிலும் மனு அளிக்க உள்ளேன்.
இந்த திருட்டு தனமான டிஜிட்டல் வெளியீட்டினால் ஆண்டுக்கு 500 முதல் 600 கோடி ரூபாய் வரை தமிழ் சினிமாவுக்கு இழப்பு ஏற்படுகிறது.” என்று தெரிவித்தார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...