காமராஜர் சிலைக்கு அருகே நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை நிறுவ வேண்டும், என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது, நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்க அரசு தீர்மானித்த வேளையில் அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நடிகர் சங்க தலைவர் நாசர் நேரில் சந்தித்து மெரினா கடற்கரையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொதுமக்கள் அதிகமாக கூடும் பொது இடத்திலோ சிவாஜி கணேசன் சிலையை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
இந்த நிலையில் கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி கணேசன் சிலை கடந்த 3-ந் தேதி அகற்றப்பட்டு அவரது மணிமண்டப வளாகத்தில் தமிழக அரசு வைத்து இருக்கிறது. இதுபற்றி சென்னையில் நடந்த நடிகர் சங்க செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.
மெரினா கடற்கரையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொதுமக்கள் அதிகமாக கூடும் பொது இடத்திலோ சிவாஜி கணேசன் திரு உருவ சிலையை நிறுவ வேண்டும் என்கிற வேண்டுகோள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, இந்த தீர்மானத்தை தமிழக அரசிடம் வேண்டுகோளாக வைத்து கடிதம் கொடுப்பதென நடிகர் சங்க செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
சிவாஜி கணேசன் சிலைக்காக சமூக அமைப்புகளும், திரைத்துறையை சேர்ந்த பெப்சி, இயக்குனர் சங்கம் அனைத்தும் குரல் கொடுத்து இருப்பதற்காக நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...