மாரடைப்பால் மரணமடைந்த ஸ்ரீதேவின் இறப்பில் சில மர்மங்கள் நிலவி வரும் நிலையில், அவரது இறுதிச் சடங்கு இன்று (பிப்.26) மும்பையில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிய ஸ்ரீதேவி, 80 களில் இந்தி சினிமாவில் கால் பதித்தார். அங்கும் வெற்றி மேல் வெற்றியைக் குவித்த அவர், பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார்.
1997-ல் போனி கபூரைத் திருமணம் செய்த பிறகு நடிப்பிலிருந்து விலகிய ஸ்ரீதேவி, 2012-ல் மீண்டும் நாயகியாகவே நடிக்க ஆரம்பித்தார். இப்போதும் ஆண்டுக்கு ஒரு படம் என்ற கணக்கில் நடித்துக் கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்தபோது, மாரடைப்பால் காலமானார் ஸ்ரீதேவி. அவரது இந்த திடீர் மறைவு இந்தியத் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மறைந்த ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு துபாயிலிருந்து மும்பைக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பகல் 12 மணிக்குப் பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியத் திரையுலகமே மும்பைக்கு திரண்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இன்று இறுதிச் சடங்கில் நேரடியாகப் பங்கேற்கிறார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...