நடிகர் விஜய் பற்றி சமீபத்தில் ‘விஜய் ஜெயித்த கதை’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று வெளியான நிலையில், தற்போது விஜய் பற்றிய மற்றொரு புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
‘தி ஐகான் ஆஃப் மில்லியன்ஸ்’ (THE ICON OF MILLIONS) என்ற தலைப்புக் கொண்ட இந்த புத்தகத்தை நிவாஸ் என்பவர் எழுதியிருக்கிறார். ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில், ‘கோடிக்கணக்கான மக்களின் அடையாளன்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகங்களை குரு, ரமேஷ், மோகன், வர்ஷா, சீனிவாசன், மணிகண்டன் ஆகியோருடன் இணைந்து ஹரிஹரன் என்பவரால் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அகில இந்திய விஜய் மக்கள் இயக்கப் பொருளாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நீதிபதி டேவிட் அன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் கலைமாமணி பசுபதி ராஜன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், விசிறி படத்தில் நடித்த ராஜ சூர்யா, மெர்சல் பட புகழ் மாஸ்டர் அஸ்வாத் மற்றும் தொழிலதிபர் ரமேஷ், தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்கள் இயக்க தலைவர்களும் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில விஜய் மக்கள் இயக்க தலைவர்களும் கலந்துக் கொண்டனர்.
புத்தகத்தை வெளியிட்டு பேசிய நீதிபதி டேவிட் அன்னுசாமி, “இந்த புத்தகம் சிறிய வடிவில் இருந்தாலும் பல செய்திகளை உள்ளடக்கியது.
இது ஓர் விஜய் ரசிகனின் படைப்பு. தளபதி விஜய் சமூகத்தில் மேலோங்கி நிற்கிறார். சமுதாயமும் மேலோங வேண்டுமென்று நினைக்கிறார், என்பதை இப்புத்தகம் குறிப்பிட்டுள்ளது. புத்தகத்தை எழுதிய எழுத்தாளருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...