Latest News :

ஸ்ரீதேவி மரணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்!
Monday February-26 2018

நடிகை ஸ்ரீதேவின் மரணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது.   இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர்  ஸ்ரீதேவி.

 

தனது நான்காம் வயதில் 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி .தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடத்து வந்த ஸ்ரீதேவி தனது பதிமூன்றாவது வயதில் 'மூன்று முடிச்சு' படத்தின் மூலமாக கதாநாயகியானார் .தொடர்ந்து ஜெயசங்கர், சிவகுமார்,ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு ,கன்னட முன்னணி நடிகர்களின் கதாநாயகியாகவும் உலா வந்தார். 1983- ல் 'ஹிம்மத் வாலா' ஹிந்தி திரை பிரவேசம் அவரை இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் 'கனவுக்கன்னி'யாக குடியேற்றி உலகப்புகழ் தேடி தந்து. 1997 -ல் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தியவர் 2012-ல்  'இங்கிலீஷ் விங்க்ளீஷ்'  படத்தில் நடித்து மீண்டும்  நடிப்பை தொடர்ந்து தனது ஆளுமை செலுத்தினார். 2013-ல்  இந்திய அரசு அவருக்கு 'பத்மஸ்ரீ ' பட்டம் அளித்து  கௌரவித்தது. தனி மனித வாழ்கையில் சோதனைகள் தாய் தந்தையரின் இழப்பு என்ற இன்னல்களையும் வேதனைகளயும் தாண்டி மன உறுதியாலும் உழைப்பாலும்  உட்சநட்சத்திர நாயகியாக திகழ்ந்து தனக்கு பின்னால் வந்த நடிகைகளுக்கு மார்கதர்சியனவர் ஸ்ரீதேவி . மாபெரும் கலைஞரான அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், இந்திய திரைப்பட  துறைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். 

 

அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுடன் துக்கம் பகிர்ந்து கொண்டு தென்னிந்திய நடிகர்  சங்கத்தின்  தலைவர் M.நாசர், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் Si.கார்த்தி , அறங்காவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நியமன செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துவதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

 

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

2065

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery