மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று ‘தெய்வமகள்’. இந்த சீரியலில் ஹீரோ பிரகாஷ் மற்றும் ஹீரோயின் சத்யாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்ததோ அதைவிட அதிகமான வரவேற்பு வில்லி கதாபாத்திரமான காயத்ரி ரோலில் நடித்த ரேகா கிருஷ்ணப்பாவுக்கு கிடைத்தது.
கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல், தற்போது முடிவுக்கும் வந்துவிட்ட நிலையில், அதில் நடித்த நடிகர்கள் வேறு வேறு சீரியலில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில், காயத்ரியான ரேகா, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ ஒருவருக்கு அம்மா வேடத்தில் நடித்திருக்கிறாராம்.
விஜய், அஜித் ஆகியோருக்கு பிறகு ரசிகர்களை அதிகமாக கொண்ட நடிகரான சிவகார்த்திகேயனுக்கு காயத்ரி ஒரு படத்தில் அம்மாவாக நடித்திருக்கிறாராம். ஆனால், அந்த படம் முழுவதுமாக இன்னும் முடிவடையாமல் அப்படியே இருப்பதாகவும் ரேகா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...