தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் தீவிரம் காட்டி வருகின்றனர். காஜல் அகர்வாலின் தங்கையான நடிகை நிஷா அகர்வால், கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் மும்பை தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இருவரும் ரகசியமாக தங்களது காதலை வளர்த்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதை மறுத்துள்ள காஜல் அகர்வால், தான் மும்பை தொழிலதிபரை காதலிப்பதாக பரவும் செய்தி தவறானது. நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.
காஜல் அகர்வால், மற்ற நடிகைகள் போலவே காதலை மறைத்தாலும், அவர் விரைவில் தனது காதலரை கைப்பிடிப்பது உறுதி, என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். மேலும், காஜல் அகர்வாலின் காதலர் மும்பை தொழிலதிபராகவும் இருக்கலாம் அல்லது தெலுங்கு ஹீரோவாகவும் இருக்கலாம், என்றும் கூறப்படுகிறது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...