தனது உறவினரின் திருமணத்திற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி, திருமணம் முடிந்த பிறகு ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது, பாத்ரூம் டப்பில் விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை பரிசோதித்த துபாய் மருத்துவர்கள், அவரது ரத்தத்தில் மது கலந்திருப்பதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஸ்ரீதேவி மரணத்தில் பல கேள்விகளை எழுப்பிய துபாய் போலீஸ், அவரது கணவர் போனி கபூரிடமும் விசாரணை நடத்தினார்கள். ஸ்ரீதேவி மரணத்திற்கு காரணமாக அவரது உறவினர்கள், நண்பர்கள் என்று பலர் பலவிதமான காரணங்களை கூறியதால், அவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வந்தது.
இந்த நிலையில், ஸ்ரீதேவியின் நெருங்கிய தோழியான பிங்கி ரெட்டி, பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் புதிய தகவல் ஒன்றை கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறிய பிங்கி ரெட்டி, “ஸ்ரீதேவி துபாய் கிளம்புவதற்கு முன்பாக என்னிடம் போனில் பேசினார். அப்போது அவருக்கும், கடும் ஜுரம் இருப்பதாக என்னிடம் கூறினார், ஆண்டிபயோடிக் மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பதாகவும், உடல் நிலை சரியில்லை என்றாலும் திருமணத்திற்கு நிச்சயம் சென்றே ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால், அவர் இறந்த பிறகு அவரை பற்றி வரும் பல்வேறு வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் பற்றி பலர் பலவிதமாக பேசிவருவது வருத்தமளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...