Latest News :

சரவணபவன் அண்ணாச்சியின் அடிமையான சன்னி லியோன்!
Thursday March-01 2018

வெளிநாட்டு ஆபாசப் படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமான சன்னி லியோன், அப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு பாலிவுட் படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தவர், தற்போது தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

 

சன்னி லியோனின் ஆர்வத்திற்கு ஏற்றவாறு அவரை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர்  வி.டி.வடிவுடையான். தமிழில் இரண்டு படங்களை இயக்கியுள்ள வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் பொட்டு என்ற படம் வெளியாக உள்ள நிலையில், சன்னி லியோனை வைத்து ‘வீரமாதேவி’ என்ற தலைப்பில் வரலாற்றுப் படம் ஒன்றை அவர் இயக்கி வருகிறார்.

 

தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் போட்டோ ஷூட்டுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் நடைபெற்றது. அப்போது, வெளிநாட்டு நடிகையான சன்னி லியோனை அசத்திவிட வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர், சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் இருந்து வித விதமான அசைவ உணவுகளை கொண்டு வந்து இறக்கினாராம், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ”சைவம் கிடைக்குமா?” என்று சன்னி கேட்டிருக்கிறார். 

 

உடனே, சென்னையில் உள்ள பிரபல சைவ ஓட்டல்களில் இருந்து உணவு வகைகளை இறக்கியிருக்கிறார்கள். அத்தனையையும் சுவைத்து பார்த்தவர் இறுதியில் சரவணபவன் உணவை ஓகே சொல்லியிருக்கிறார். அதன்படி, சன்னி லியோன் சென்னையில் இருந்த ஐந்து நாட்களும், சரவணபவன் ஓட்டலில் இருந்து விதவிதமான சைவ உணவுகளை சுவைத்து மகிழ்ந்தவர், அண்ணாச்சியின் சரவணபவன் ஓட்டல் உணவுக்கு அடிமையாகவே ஆகிவிட்டார், என்று படக்குழு சொல்கிறார்கள்.

Related News

2081

நடிகை சரோஜா தேவி வாழ்க்கை வரலாறு!
Monday July-14 2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது - மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி
Monday July-14 2025

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

Recent Gallery