‘தப்புத்தண்டா’ படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமான வி.சத்யமூர்த்தி, தனது கிளாப்போர்டு புரொடக்ஷன் நிறுவனம் மூல பல வெற்றிப் படங்களை வெளியிட்டு வருகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘விஜய் சேதுபதி - கெளதம் கார்த்திக்கின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டது சத்யமூர்த்தி தான்.
இதையடுத்து தனது கிளாப்போர்டு புரொடக்ஷன் நிறுவனம் மூலம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தை தயாரித்து வரும் சத்யமூர்த்தி, வரும் மார்ச் 29 ஆம் தேதி வெளியாக உள்ள ‘கோலிசோடா 2’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார்.
இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் ரசிகர்களை கவர்வது மிகப்பெரிய சவாலான விஷயமாகிவிட்டது. மக்களுக்கு எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும், எதை அவர்கள் ரசிப்பார்கள், என்பதை புரிந்து அதற்கு ஏற்றவாறு படங்களை வெளியிட்டு வரும் கிளாப்போர்டு புரொடக்ஷன் ரசிகர்களிடம் மட்டும் இன்றி தமிழ் திரையுலகிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து கூறிய வி.சத்யமூர்த்தி, “விஜய் மில்டனின் படங்கள் யாவும் தொழில்நுட்பத்திலும், கதைக்களத்திலும் வலுவானதாக இருக்கும். அதனால் தான் அவர் படங்கள் மீது எனக்கு எப்பவுமே ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டிருந்த கோலிசோடா 2 படத்தின் டிரைலர், தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. கவுதம் வாசுதேவ் மேனன் குரலும், அவருடைய எதிர்பாராத பங்களிப்பும் டிரைலருக்கு பக்கபலமாய் அமைந்திருக்கின்றது. விஜய் மில்டன் மற்றும் அவருடைய குழுவினர் மீது இருக்கும் முழு நம்பிக்கையில், நான் இந்த கோலிசோடா 2 படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருக்கின்றேன்.” என்றார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...