சி.ஆர் கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் ‘செயல்’. ராஜன் தேஜேஸ்வர் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் தருஷி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.
வி.இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஆர்.நிர்மல் எடிட்டிங் செய்கிறார். லலிதானந்த், ஜீவன் மயில் ஆகியோர் பாடல்கள் எழுத, கனல் கண்ணன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். பாபா பாஸ்கர், ஜானி ஆகியோர் நடனம் அமைக்க, ஜான் பிரிட்டோ கலையை நிர்மாணிக்கிறார். ஏ.பி.ரவி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரவி அப்புலு இயக்குகிறார்.
பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள ‘செயல்’ படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தை வெகுவாக பாராட்டியதோடு யு சான்றிதழும் வழங்கியுள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...