திருமண வயது வந்துவிட்டால் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், என்ற விதிமுறையெல்லாம் நடிகர் நடிகைகளுக்கு கிடையாது. 40 வயதை கடந்தும் பல நடிகர்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பது போல 35 வயதை கடந்தும் நடிகைகள் பலர் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
அதேபோன்ற, நடிகர் நடிகைகள் திருமணம் செய்யும் போது வயது வித்தியாசத்தையெல்லாம் பார்ப்பதில்லை. ஒரு சமயத்தில் மணப்பெண் அதிக அயதுடையவராக இருக்கலாம், அல்லது மணமகன் அதிக வயதுடையவர்களாக இருக்கலாம், இதெல்லாம் அவர்களுக்கு சாதாரணம் காதல் மட்டுமே முக்கியம் என்ற நிலை தான் இருக்கிறது.
அந்த வரிசையில், 25 வயதுடைய இளைஞரை 35 வயதுடைய தமிழ் நடிகை ஒருவர் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார். அவர் தான் நம்ம ஸ்ரேயா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, ஒரு சில இந்திப் படங்களிலும், ஆங்கிலப் படங்கலிலும் நடித்திருக்கும் இவருக்கு தற்போது தமிழில் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் மட்டும் ஒரு படம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரோ கோஷ்சீவை ஸ்ரேயா திருமணம் செய்துக் கொள்ளப்போகிறார். 35 வயதான ஸ்ரேயா 25 வயதான ஆண்ட்ரோவை திருமணம் செய்துக் கொள்ளப்போவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக பாலிவுட்டில் இதுபோன்ற பெரும் வயது வித்தியாசம் உள்ள திருமணம் ஒன்று நடந்திருந்தாலும், அந்த தம்பதிகள் சில ஆண்டுகளிலேயே பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேயா - ஆண்ட்ரோ திருமணம் வரும் மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் உதய்பூரில் நடைபெற உள்ளது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...