’தீரன் அதிகாரம் ஒன்று’ வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் விவசாயி வேடத்தில் நடித்து வரும் கார்த்தி, அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஒருவரது படத்தில் நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இமயமலை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற உள்ளது.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, முக்கிய வேடம் ஒன்றில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். இதன் மூலம் கார்த்தி மற்றும் கார்த்திக் முதன் முறையாக இணைகிறார்கள். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் ரஜத் ரவிசங்கர், ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், இயக்குநர் ஆர்.கண்ணன் ஆகியோருடன் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்கிறார். ஜெயஸ்ரீநாராயணன் கலையை நிர்மாணிக்க, அன்பறிவ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கின்றனர். கபிலன், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுத, கே.வி.துரை நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார்.
ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். இவர் சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்தை தயாரித்தவர். மேலும், திரிஷா நடிப்பில், ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘மோகினி’ படத்தையும் இவர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா இன்று (பிப்.3) சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. படப்பிடிப்பு இம்மாதம் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதையடுத்து ஐரோப்பிய நாட்டில் 15 நாட்களும், ஐதராபாத், மும்பை, இமயமலை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...