Latest News :

உண்ணும் உணவு விஷம் ஆனதற்கு நம் பேராசையும் உணவு பொருட்கள் வியாபாரமானதே காரணம் - விலாசும் கமல்
Monday August-14 2017

நடிகர் ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் தொண்டு நிறுவனதுடன்  சத்யபாமா யுனிவர்சிட்டி மற்றும் ட்ரான்ஸ் இந்தியா இணைந்து  "விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை" என்கிற" நம்மாழ்வர்" கருத்துகளை பரப்பும் விதமாக உணவு சார்ந்த இயற்கை விவசாயத்தையின் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு "நானும் ஒரு விவசாயி"  என்கிற தலைப்பில்  பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து "கின்னஸ்" சாதனை நிகத்தப்பட இருக்கிறது. வரும்  ஆகஸ்டு 26 ம் நாள் திண்டிவனத்தில் அருகில்  உள்ள ஆவணிபூர் கிராமத்தில் இச்சாதனை நிகழவிருக்கிறது. இதில்  ஏராளமான மாணவர்கள், சினிமா  பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் , விவசாய ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என 5000த்திற்கும் மேற்பட்டோர் இச்சாதனையில் பங்கு கொள்ளவுள்ளனர்.

 

 

இந்த "கின்னஸ்"  சாதனை நிகழ்வில் மாறுவோம் மாற்றுவோம் தொண்டு நிறுவன உறுப்பினர்களுடன் இணைந்து இச்சாதனை நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் மற்றும் லோகோவை அறிமுகப்படுத்தி வைத்த  "உலக நாயகன்  கமல்ஹாசன்"  இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் காணொளியை கண்டு மிகுந்த பரவசத்துடன் குழுவினரை பாராட்டினார். 

 

மேலும் இயற்கை விவசாயத்திற்கான கின்னஸ் சதனை நிகழ்ச்சியின் துவக்கமாக  நாட்டு விதை விதைத்து  "நானும் ஒரு விவசாயி" மாறி மாறுவோம் மாற்றுவோம் என்றார். வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தன் ரசிகர்களின் நற்பணிமன்றத்தினரையும்  மாறுவோம் மாற்றுவோம் குழுவினரோடு பணிபுரியவும்  கட்டளையிட்டார். மேலும் மாற்று விதையால் உருவாகும் செடியில் பூச்சிகள் உட்காராமல் இருக்க வேரிலே விஷம் பாய்ச்சுகிறோம். உங்களுக்கு புரியவில்லையா? நாமும் விஷம் தான் உண்கிறோமென்று!, அதனால் இயற்கை உரம் கொண்டு பாரம்பரிய நாட்டு விதைகளால் உருவான உணவுகளை உண்போம் என்றவர் சுமார் 70% பாரம்பரிய நாட்டு விதைகள் நம் நட்டில் அழிந்து விட்டதாகவும் மீதமுள்ள 30% பாரம்பரிய நாட்டு விதைகளை காக்க ஒவ்வொருவரும்  "நானும் ஒரு விவசாயியாக " மாறுவோம் மாற்றுவோம் என்றார்.

 

 

*நிகழ்ச்சியில் செயற்கை நிறங்கள்  உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வெள்ளை சக்கரை, மைதா போன்றவற்றை தவிர்த்து  இயற்கை தானியங்களான கேழ்வரகு, கோதுமை, நாட்டு சக்கரையால்  உருவான கேக்கை வெட்டி ஆரோக்கியமான கேக் கலாச்சாரத்தை வரவேற்போம் என்றார்.

*மாறுவோம் மாற்றுவோம் கேடயத்தை வெளியிட்டார்.

*இயற்கை உரம் கொண்ட பையில் பாரம்பரிய நாட்டு விதைகளை தன் வீட்டு தோட்டத்தில் வளர்ப்பதாக உறுதியளித்தார். 

*"நானும் ஒரு விவசாயி" விழா குழுவினர் கல் உப்பு, பட்டை தீட்டாத அரிசி, செக்கில் ஆட்டிய எண்ணெய், இயற்க்கை தானியங்கள், இயற்கையாக உருவான பழங்கள் போன்றவற்றை கமல்ஹாசனுக்கு பரிசளித்தார்கள்

*உணவு பொருட்கள் நஞ்சாக மாறிக்கொண்டிருப்பதை காட்டும் ஆவணப்படத்தின்  videoவை  பார்வையிட்டார்.

*"நானும் ஒரு விவசாயி" என்ற motion poster ஐ பார்வையிட்டார். 

 

இந்த நிகழ்ச்சியில்  மாறுவோம் மாற்றுவோம் தொண்டு நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகருமான ஆரி  சத்யபாமா யுனிவர்சிட்டியின் மக்கள் தொடர்பு வேந்தர் மரியாஜீனா ஜான்சன்,  ட்ரான்ஸ் இந்தியா மீடியா & எண்டர்டெயின்மண்ட் பி.லிட். உரிமையாளர் ராஜேந்திரராஜன்,  Palam கல்யாணசுந்தரம், Ecoscience Research Foundation இயக்குனர்  சுல்தான் அஹ்மத் இஸ்மாயில் Ph.D,D.Sc, மற்றும் WOW celebrations முகமது இப்ராஹிம்,  சமூக ஆர்வலரும் Shuddha Foundation உரிமையாளருமான  நிஷா தோடா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related News

210

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery