Latest News :

தேர்தலில் போட்டியிடும் நடிகை ரோகினி!
Saturday March-03 2018

தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் நாளை (பிப்.4) நடைபெற உள்ளது. இதில் ராதாரவி தலைமையிலான அணியை எதிர்த்து ராம ராஜ்யம் அணி போட்டியிடுகின்றது.

 

ராம ராஜ்யம் அணி சார்பில் துணை தலைவர் பதவியில் நடிகை ரோகினி போட்டியிடுகிறார். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் எனக்கு தெரிந்து இதயத்தை திருடாதே என்ற படத்தின் மூலமாக நான்  பின்னணி குரல் கொடுத்து வருகின்றேன்.  இதுவரை இந்த சங்கத்தில் எந்த பதவிக்கும் தேர்தல் நடந்தது கிடையாது, நானும் எண்ணியது இல்லை ஆனால் இன்று  கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.  

 

நான் வெளியில் சென்று பார்க்கும்போது விவசாய பிரச்சினைகள் உட்பட எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் குரல் கொடுக்கும் நான் என்னுடைய துறையில் நடக்கும் பிரச்சினையை கவனிக்கவில்லை என்பது மிகப்பெரிய தவறு என்பதை நான் உணர்கிறேன். முதலில் நான் மூத்தவர்கள் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையில் தான் நான் மற்ற வேலைகளை  கவனித்து வந்தேன். ஆனால் மெல்ல மெல்ல முறைகேடுகள் நடைபெறுவதும், உழல் நடைபெறுவதும் இன்னும் நிறைய பின்னணி கலைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி கொண்டிருப்பதை பார்த்ததும் முதலில் இந்த பிரச்சினையை தான் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த ஒரு மாத காலமாக சங்கத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்ட பிறகு  நானும் பொறுப்புக்கு வரேன் அனைவரும் ஓன்றாக பணியாற்றலாம்  அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வீடு வீடாக சென்று அவர்களை பார்த்த போது அவர்கள் அனைவரும் கூறிய ஓரே விஷயம் என்னவென்றால் நங்கள் டப்பிங் பேசியே ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டதாக கூறினார்கள். 

 

பாலன் என்ற ஒரு உறுப்பினர் அவர் இறந்த பின்பு அவருடைய உறப்பினர் அட்டையை கொண்டுவந்து அவருடைய இறுதி சடங்கிற்கு தேவையான பணத்தை கேட்டதற்கு மதிக்கவே இல்லை என்றும், ஏனோ தானோ என்று 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாக கூறினர். இவ்வாறு பல நிகழ்வுகள் கேட்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த நிலை மாறவேண்டும் என்றால் இந்த தேர்தலில் இவர்களுடன் கைகோர்த்து நிற்கவேண்டும். இந்த தேர்தலில் நான் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தேன். 34 வருடங்களில் இவர்கள் உறுபினர்களுக்கு ஓய்வூதியம் பணம், கல்வி உதவி தொகை என பல்வேறு திட்டங்களை வைத்திருந்தாலும் அவர்களுக்கு வேலை இல்லை என்பதை நான் ஓரு கலைஞராக உணர முடிகிறது. டப்பிங் கலைஞர்கள் அனைவர்க்கும் ஓரு சுழற்சி முறையில் வேலைகள் வர ஏற்பாடுகள் செய்யபட வேண்டும். இந்த முறைகேடுகளை எல்லா உறுப்பினர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனபது தான் இந்த நிகழ்வு. 

 

இனி ஒரு மாற்றம் வேண்டும்  வேண்டும் அந்த மாற்றத்தினால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் வந்து எங்கள் அணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

Related News

2100

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக மீண்டும் களம் இறங்கும் ரமீஸ் ராஜா!
Friday September-12 2025

’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...

Recent Gallery