அதிமுக எம்.எல்.ஏ-வுடன் மோதும் விஜய்!
Monday March-05 2018

’மெர்சல்’ படம் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து விஜயின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அரசியல்வாதிகள் கூர்ந்து கவணித்து வருகிறார்கள். தமிழக அரசியல்வாதிகள் மட்டும் இன்றி தேசிய அரசியல்வாதிகளும் விஜய் மீது ஒரு கண் வைத்திருக்க, அவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

 

இந்த நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல்கள் சில கசிந்துள்ளது. அதாவது, இந்த படத்தில் விஜய் மல்டி மில்லியனராக வருகிறாராம். அத்துடன் ஏழை மாணவர்களின் படிப்புக்காக தனது சொத்துக்களை செலவழிக்கும் விஜய், கல்வித் துறையில் நடைபெறும் வியாபாரத்திற்கு எதிராகவும் சில நடவடிக்கைகளை எடுப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். 

 

இதில் விஜய்க்கு வில்லனாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கரு.பழனியப்பன் நடிக்கிறார். மற்றொரு வில்லனாக ராதாரவி நடிக்கிறார்.

Related News

2106

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery