தனது கவர்ச்சியால் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்து வந்த சன்னி லியோன், விரைவில் தென் இந்திய ரசிகர்களின் கனவு கண்ணியாக மாறப்போகிறார். ஆம், அவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் ‘வீரமாதேவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், சன்னி லியோனுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் கர்ப்பமாகமல் அவர் இந்த குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்.
ஏற்கனவே, பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வரும் சன்னி லியோன், கடந்த ஜூன் மாதம் வாடகை தாய் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரது கருப்பைக்குள் தனது கருமுட்டையையும், தனது கணவர் டேனியல் வெப்பரின் உயிர் அணுவையும் செலுத்தியிருக்கிறார். கடந்த வாரம் அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது.
இதில் அப்பெண் அழகான இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இதன் மூலம் சன்னி லியோனுக்கு அழகான இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆஷெர் வெப்பர், நோவா வெப்பர் என்று அக்குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தனது வளர்ப்பு மகள் மற்றும் தனக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளுடன் சன்னி லியோன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகள் பெற்றோடதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...