சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் நடிகை அமலா பாலை கேரள போலீஸ் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததும், அவர் மீது அமலா பால் போலீசில் புகார் அளித்ததும் அந்த நபர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் அமலா பாலின் தைரியத்தை அனைவரும் பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில், கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியை திரட்டுவதற்காக அமலா பால் ‘அமலா ஹோம்’ என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
இது குறித்து அமலா பால் கூறுகையில், “அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடை பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுதுதான் சில முக்கியமான புள்ளி விபரங்களை கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் கருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில், 70 சதவீதம் கார்னஸ் டிரான்ஸ்பிளாண்ட் (Cornes Transplant) மற்றும் கேட்ராக்ட் (Cataract) போன்ற அறுவை சிகிச்சைகளால் குணப்படுத்தக்கூடியவை. இதற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கியமான் விஷயம் போதிய கண் தானம் இல்லாதது தான். தற்பொழுதுள்ள நிலையில் வருடத்திற்கு வெறும் 40000 கண் சிகிச்சைகள் மட்டுமே பண்ணக்கூடிய அளவில் கண் தானம் நடக்கின்றது.
நான் எனது கண்களை தானம் செய்வது மட்டுமில்லாமல் இந்த கண் தான பற்றாக்குறையை நீக்க, இந்த அறுவை சிகிச்சைகளுக்கு நிதி திரட்ட ‘அமலா ஹோம்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நாம் அனைவரும் ஒன்றினைந்தால் அனைவருக்கும் கண் பார்வை கிடைக்கும்படி செய்து நமது அழகான, மிக வேகமாக வளர்ந்து வரும் நமது தேசத்தை அவர்களையும் காண வைக்கலாம்.” எண்றார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...