Latest News :

பிரபலங்களின் தூக்கத்தை கெடுத்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் கருப்பி பாடல்!
Tuesday March-06 2018

படம் வெளியாக ரசிகர்களின் மவுத் டாக்கால் பல படங்கள் பலரது கவனத்தை ஈர்த்ததுண்டு. ஆனால் வெளியாவதற்கு முன்பாக ஒட்டு மொத்த ரசிகர்களை மட்டும் இன்றி திரையுலக பிரபலங்களின் கவனத்தையும் ஈர்ப்பது சில படங்கள் மட்டுமே. அந்த சில படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் படம் தான் ‘பரியேறும் பெருமாள்’.

 

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடலாக “கருப்பி என் கருப்பி...” என்ற பாடல் சமீபத்தில் வெளியாக வைரலாக பரவி வருகிறது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, திரையுலக பிரபலங்களின் தூக்கத்தையும் கெடுத்திருக்கும் இப்பாடல் குறித்து சில பிரபலஞ்களில் பகிர்ந்துக்கொண்டது இதோ,

 

ராம் கூறுகையில், “’தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதைத் தொகுப்பின் மூலமாக அறிமுகமாகி, ஆனந்த விகடனில் வெளியான மறக்கவே முடியாத தொடர் ‘மறக்கவே நினைக்கிறேன்’ மூலம் தமிழக மக்களை தன் வசப்படுத்திய மாரி செல்வராஜின் முதல் படம். அல்லது முதல் கோபம்னு கூட சொல்லலாம். அவனுடைய இயலாமை, அவனுடைய ஆற்றாமை, அவனுக்குள்ள இருக்கிற ரௌத்திரம், உன்மத்தம், வெறி, எரிச்சல் வரலாற்றின் மீது இருந்த தீராத கோபம் இது எல்லாத்தோட மொத்த வெளிப்பாடா இந்தப் பாட்டு இருக்கு. 

 

’பரியேறும் பெருமாள்’ கதைக்குள்ள இருக்கிற மொத்த உணர்ச்சியும் இந்தப்பாட்டுல இருக்கிறதா நான் நினைக்கிறேன். அந்த உணர்ச்சியில இருந்த கோபத்தையும் உணர்ச்சியையும் சந்தோஷ் நாராயணன் அவர் குரலிலும் இசையிலும் மிகச் சிறப்பா கொண்டு வந்திருக்கார். 

 

பா.இரஞ்சித், தமிழ் சினிமாவுக்கு அட்டகத்தி மூலமா அறிமுகமானார். என்னைப் பொறுத்தவரைக்கும் அட்டகத்தி, தமிழ் சினிமாவின் முக்கியமான சினிமாவில் ஒண்ணு. தமிழ் சினிமாவில் அதுவரை பார்க்காத ஒரு திரைமொழியையும், அதுவரை பார்க்காத ஒரு மக்களின் வாழ்வியலையும் கொண்ட ஒரு படம். பா.இரஞ்சித்தின் முதல் தயாரிப்பு இது, அவருக்கும் நீலம் புரொடக்சனுக்கும் என்னுடைய வாழ்த்துகள். சந்தோஷ் நாராயணனுக்கு என்னுடைய வாழ்த்துகள். மாரி செல்வராஜூக்கும் என்னுடைய வாழ்த்துகள்.” என்றார்.

 

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து கூறுகையில், “கருப்பி பாடலில் வெளிப்படையாக ஒலிக்கும் வலியும் அடிநாதமாக கேட்கும் விடுதலை உணர்வும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. வாழ்த்துக்கள்” என்றார்.

 

‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் பேசுகையில், “உள்ளுக்குள் புதைந்து கிடந்த வலியை ஒரு பாட்டாக மாற்றியிருக்கிறார்கள். “கருப்பி என் கருப்பி” என் மொத்த கவனத்தையும் திருடிக்கொண்டிருக்கிறது” என்று பாராட்டியிருக்கிறார். 

 

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி பேசுகையில், “பரியேறும் பெருமாள் கருப்பி பாட்டு ரொம்ப தனித்துவமா இருக்கு. இசை, வரிகள், பாடலில் வரும் காட்சிகள் எல்லாம் ரொம்ப உயிரோட்டமா இருக்கு. படம் பார்க்க வேண்டும் என்று தூண்டுகிறது.” என்றனர். 

 

பாடலாசிரியர் முருகன் மந்திரம் கூறும்போது, “ஒரு படைப்பு அல்லது பாடல் சாதாரணமாக கடந்துபோகக்கூடாது. கேட்கிறவங்களோட சிந்தனையை மாற்றணும். யோசிக்க வைக்கணும். கருப்பி பாடல் வரிகள் நிச்சயமா கேட்கிறவங்களோட சிந்தனைக்குள்ள போய் பேசும். ஒரு உயிரை இழந்த  துயரத்தின் உரையாடலாக அமைந்திருக்கிற கருப்பி பாடலை சாதாரணமாக எவராலும் கடந்து போக முடியாது.” என்றார்.

Related News

2116

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக மீண்டும் களம் இறங்கும் ரமீஸ் ராஜா!
Friday September-12 2025

’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...

Recent Gallery