Latest News :

அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றிமாறன்’!
Tuesday March-06 2018

லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.. அபிசரவணன்  கதாநாயகனாக  நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மனோ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

 

தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு  செய்துள்ள  இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார்.

 

இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால் தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அதை தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான்.

 

இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க கிளம்பினால்..? அதுதான் இந்தப்படத்தின் கதை. 

 

இதை கொஞ்சம் ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் மனோ. குறிப்பாக பழிவாங்கும் முறையில் நிறைய  உத்திகளை கையாண்டுள்ளார்.. அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும். அதுமட்டுமல்ல இந்த பழிவாங்கும் விஷயத்தில் தந்தை மகன் பாசப்போராட்டமும் அடங்குகிறதாம்.. 

 

இந்தப்படத்தின் கதையை போனிலேயே கேட்ட நடிகர் அபிசரவணன், கதையால் ஈர்க்கப்பட்டு உடனே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

 

தற்போது இந்தப்படம் விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. விரைவில் இசை மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

Related News

2121

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

”‘கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” - டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி
Friday June-14 2024

விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது...