தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்த நடிகை ஆண்ட்ரியா பல படங்களில் இரண்டாம் ஹீரோயினாக நடித்து வந்ததோடு, சில படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டு வந்தார். இதற்கிடையே அவர் இறுதியாக நடித்த ‘தரமணி’ என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் ‘தரமணி’ வெற்றி பெற்றதால், ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்கும் என்று ஆண்ட்ரியா எதிர்ப்பார்த்தார். ஆனால், அவர் எதிர்ப்பார்ப்பு வீணாய் போனது தான் மிச்சம். ஆம், தமிழில் ஆண்ட்ரியா வசம் ஒரு படம் கூட இல்லை. இதனால் ரொம்பவே உடைந்து போன ஆண்ட்ரியா, தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய ரூட்டில் பயணிக்க தொடங்கியுள்ளார்.
கடை திறப்பு, கல்லூரி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்தாலும் உடனே ஓகே சொல்கிறாராம். ஆனால், அதற்காக அவர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 லட்சம் கேட்கிறாராம்.
இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்ட துணிக்கடைகளின் புதிய கிளைகள் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த கிளைகள் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஆண்ட்ரியா ரூ.3 லட்சம் கேட்டாராம். அதுவும் நிகழ்ச்சிக்கு அவர் வந்தால் ஒரு மணி நேரம் தான் இருப்பேன், என்ற கண்டிஷனோடு கலந்துக்கொள்கிறாராம். ஆண்ட்ரியா கேற்கும் சம்பளத்திற்கும், அவர் போடும் கண்டிஷனுக்கும் ஒகே சொன்ன நிறுவனம், சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட மூன்று கிளைகளுக்கும் ஆண்ட்ரியாவையே அழைத்தார்களாம்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...