Latest News :

அம்பிகாவின் மகனும், லிவிங்ஸ்டனின் மகளும் ஜோடி சேருகிறார்கள்!
Friday March-09 2018

80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்த அம்பிகா, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்திருப்பவர், தற்போதும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவரது மகனும், திரைக்கதையாசிரியரும் நடிகருமான லிவிங்ஸ்டனின் மகளும் ஜோடி சேரப்போகிறார்கள்.

 

ஆம், ’கலாசல்’ என்ற படத்தில் இவர்கல் இருவரும் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகிறார்கள். கலைத்தாய் பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் பி.சி.பாலு தயாரிக்கும் இப்படத்தில் அம்பிகாவின் மகன் ராம்கேசவ் ஹீரோவாகவும், லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

நிஜாமுதீன் இசையமைக்கும் இப்படத்திற்கு பாபுகுமார் ஒளிப்பதிவ் செய்கிறார். கல்லை தேவா கலைப் பணியை கவனிக்க, கோபிகிருஷ்ணா எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். டேஞ்சர் மணி ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, கல்யாண், கிரிஷ் ஆகியோர் நடனத்தை வடிவமைக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகப் பணியை அருள் கவனிக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி அஸ்வின் மாதவன் இயக்குகிறார். இவர் இயக்குநர்கள் சுந்தர்.சி, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

 

இன்று (மார்ச் 09) பழனியில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

 

படம் குறித்து கூறிய இயக்குநர், “சினிமாவில் சாதனை புரிந்த பிரபல நடிகை அம்பிகாவின் மகன், இயக்குநர், நடிகர், கதாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

 

படத்தின் கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் இப்படியும் சொல்லலாம், மனிதனின் தேவைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கடவுள்கிட்ட வேண்டிகிட்டு நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற விஷயங்களை காணிக்கையாக செலுத்தி விட்டு. வேண்டியதை கேட்டு பெறுவது  பண்டம்மாற்று முறை மாதிரியான ஒரு வியாபாரம் தான்.

 

நாம வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.” என்றார்.

Related News

2138

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery