மலையாள நடிகர்கள் பலர் சொகுசு கார் வாங்கியதில் முறைகேடு செய்திருப்பதை கேரள காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இதில் நடிகை அமலா பாலும் சிக்கினார். பாண்டிச்சேரில் உள்ள போலியான முகவரி ஒன்றை கொடுத்து அவர் சொகுசு கார் வாங்கிய விவாகரத்தில் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் கேரளா மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கும் பிரிதீவ்ராஜ், சொகுசு கார் வாங்கியதற்காக ரூ.50 லட்சத்தை வரியாக செலுத்தியுள்ளார்.
பெங்களூரில் உள்ள ஷோரூமில் இத்தாலி நாட்டு காரான லம்போகினி கார்ரை ரூ.2.13 கோடிக்கு பிரிதீவ்ராஜ் வாங்கியுள்ளார். இந்த கார் நேற்று முன் தினம் பிரீதீவ்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கேரள மாநிலம் எர்ணாகுளம் காக்கநாட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பதிவு செய்ய காரை கொண்டு வந்த அவர், வரியாக ரூ.43 லட்சத்து 14 ஆயிரத்து 500 - ஐ ரொக்கமாக செலுத்தினார்.
மேலும், தான் விரும்பிய பதிவு எண் கே.எல்.7 சி.எண்.1 என்ற எண்ணை அவர் கேட்டார். இதே பதிவு எண்ணை மேலும் 4 பேர் கேட்டனர். இதனால் ஆர்.டி.ஓ அந்த நம்பரை ஏலத்தில் விட, ரூ.7 லட்சம் கொடுத்து பிரீத்விராஜ் அந்த எண்ணை பெற்றார். இதனால் வெளிநாட்டு காரை வாங்கியதால் பிரீதிவிராஜ் கூடுதலாக மொத்தம் 50 லட்சம் ரூபாயை கேரள அரசுக்கு செலுத்தியுள்ளார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...