‘விவேகம்’ படத்தின் தோல்வியால் துவண்டு போயிருந்த அஜித் ரசிகர்கள், ‘விஸ்வாசம்’ படத்தின் அப்டெட்டால் உற்சாகமடைந்தார்கள். சிறுத்தை சிவாவுடன் அஜித் மீண்டும் இணைவது அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், இந்த முறை எந்தவித பரிசோதனை முயற்சியிலும் இறங்காமல் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக விஸ்வாசம் இருக்கும் என்று இயக்குநர் சிவா கொடுத்த உத்ரவாதத்தால் அஜித் ரசிகர்கள் குஷியடைந்துள்ளார்கள்.
மேலும், அஜித்துக்கு ஜோடியாக நயந்தாரா நடிப்பது, டி.இமான் இசையமைப்பது என்று ‘விஸ்வாசம்’ படத்தின் அப்டெட் ரசிகர்களை உற்சாகப்படுத்த, இம்மாதம் 23 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்ற அறிவிப்பை கேட்டவுடன், பேனர் வைத்து கொண்டாடினார்கள்.
இந்த நிலையில், வரும் 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் நடத்த தடை விதித்துள்ள தயாரிப்பாளர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், அஜித் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தள்ளிப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே அஜித் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதால், படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போதைய வேலை நிறுத்தப் போராட்டம் ’விஸ்வாசம்’ படத்திற்கு கூடுதல் சிக்கலை கொடுத்திருக்கிறது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...