ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்த பாபி சிம்ஹா, ‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகரானதோடு, தேசிய விருதும் பெற்றார்.
தற்போது ஹீரோ மற்றும் வில்லன் என்று இரண்டு வேடங்களிலும் கவனம் செலுத்தி வரும் அவர், விக்ரமின் ‘சாமி 2’ படத்தில் வில்லனாக நடித்து வருவதோடு, இன்னும் பல படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், திரைப்படங்களில் நடித்துக் கொண்டே வெப் சீரியல் ஒன்றில் பாபி சிம்ஹா நடிக்கப் போகிறாராம். இந்த சீரியலில் அவர் ஹீரோ என்றாலும், அவரது கதாபாத்திரம் கொடூரமான வில்லத்தனம் கொண்டதாக இருக்குமாம். இதில் பாபிக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரியலை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
வெப் சீரியல்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவைப் பார்த்து பிரபல நடிகர்கள் சிலர் வெப் சீரியகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ப்ரீத்’ என்ற வெப் சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...