அஜித் என்ன செய்தாலும் அதை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தி, அதை வைரலாக பரவ விடுவதில் அவரது ரசிகர்கள் கைதேர்ந்தவர்கள். தனது பிள்ளைகளின் பள்ளி விழாவில் ஒரு ஓரமாக நின்ற அஜித்தை புகைப்படம் எடுத்து அதை உலகம் முழுவதும் பரவவிட்ட ரசிகர்கள் தற்போது அவரது போன் கால் ஒன்றை பரவ விட்டிருக்கிறார்கள்.
ரொம்ப சாதாரணமாக உணவகம் ஒன்றில் அஜித் பீட்சா ஆர்டர் செய்கிறார். அவரிடம் ஆர்டர் எடுக்கும் ஊழியரை, பெயர் சொல்லி அழைத்து “எப்படி இருக்கீங்க...பார்த்து ரொம்ப நாளாச்சு...” என்றும் விசாரிக்கும் அஜித், அதே உணவகத்தில் உள்ள மற்றொரு ஊழியர் பேசும் போதும் ரொம்ப பொறுமையாக பேசி அவரையும் நலம் விசாரித்துவிட்டு, பிறகு தனக்கு தேவனையான பீட்சாவை ஆர்டர் செய்கிறார்.
5 நிமிடங்கள் ஓடும் இந்த போன் கால் ஆடியோவை அஜித் ரசிகர்கள் தற்போது டிரெண்டாக்கி இருப்பதோடு, சமூக வலைதளங்களில் வைரலாக்கியும் வருகிறார்கள்.
இதே அந்த ஆடியோ:
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...