பிரபல டிவி நடிகை தூக்கு போட்டு தற்கொலை!
Monday March-12 2018

சினிமா மற்றும் டிவி நடிகைகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ் சினிமா மட்டும் அல்லாமல், தெலுங்கு, இந்தி என பல மொழி சினிமாக்களில் இதே பிரச்சினை தான்.

 

இதற்கிடையே, கொல்கத்தாவில் 23 வயது இளம் டிவி நடிகை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மெளமிதா சாஹா என்ற அந்த நடிகை பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக தெற்கு கொல்கத்தாவின் ரீனெண்ட் பார்க்கிலுள்ள ஒரு அபார்ட்மெண்டில் வீடெடுத்து தனியாக வசித்து வந்தார். சில டிவி சீரியல்களில் நடித்து வந்த அவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

 

இந்த நிலையில், இரவு வெகு நேரமாக மெளமிதாவை அவரது பெற்றோர்கள் மொபைலில் அழைத்துள்ளனர். ஆனால், அழைப்பு எடுக்கப்படாமல் இருக்கவே, அவர்கள் சந்தேகம் அடைந்து உடனே வீட்டின் உரிமையாளருக்கு தகவலைத் தெரிவித்துள்ளனர். பிறகு போலீஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மெளமிதா சாஹா ஃபேனில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். 

 

இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸார், இந்த தற்கொலைக்கு காரணம் மன உளைச்சலா அல்லது வேறு எதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

Related News

2156

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery