வில்லன், ஹீரோ என்று தமிழ் சினிமாவை கலக்கிய சத்யராஜ், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு, தமிழர்களின் பிரச்சினைக்கும் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அவருக்கு கிடைத்திருக்கும் கெளரவத்தால் ஒட்டு மொத்த தமிழர்களே மகிச்சியடைந்துள்ளனர்.
எஸ்.எஸ்.ராஜமெலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ மற்றும் அதன் இரண்டாம் பாகம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தில் சத்யராஜ் நடித்திருந்த கட்டப்பா என்ற கதாபாத்திரம் படத்தின் திருப்புமுனை பாத்திரமாக இருந்ததோடு, இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பார்க்க தூண்டும் வகையிலான வேடமாகவும் இருந்தது.
இந்த நிலையில், இது நாள் வரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த கெளரவம் கட்டப்பா வேடத்திற்காக நடிகர் சத்யராஜுக்கு கிடைத்துள்ளது. ஆம், லண்டனில் உள்ள உலக புகழ்ப்பெற்ற மேடம் துஸ்ஸாத் மியூசியம், சத்யராஜின் கட்டப்பா போன்ற மெழுகு சிலையை வைத்து அவரை கெளரவப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு பாகுபலி தோற்றத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது.
தமிழ் நடிகர் ஒருவருக்கு மேடம் துஸ்ஸாத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால், சத்யராஜுக்கு கிடைத்த கெளரவம் ஒட்டு மொத்த தமிழகர்களுக்கு கிடைத்த கெளரவமாக கொண்டாடப்படுகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...