கோடைக்காலத்தின் சூடு அதிகரிக்கும் முன்பாகவே தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. சென்னை போன்ற மாநகரங்களில் தண்ணீருக்காக பொதுமக்கள் பிளாஷ்டிக் குடங்களுடன் அலைமோதி வருகின்றனர்.
இந்த நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் பொத்மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.
ரஜினி மற்றும் கமல் ஆகியோர் நேரடியாக ரசியலில் இறங்கிவிட்ட நிலையில், விஜயும் விரைவில் அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு தனது மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதோடு, புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஆப் மற்றும் இணையதளம் ஒன்றையும் விஜய் தொடங்கியுள்ளார். இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் தலைமையில், விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.
அதன்படி, மதுரை தெற்கு மாவட்ட விஜய் தலைமை மக்கள் இயக்கம் சார்பாக குடிநீர் தட்டுப்பாட்டில் தவித்த திருப்பரங்குன்றம் தொகுதி அனுப்பானடி அருகே உள்ள பாபுநகர் மக்களுக்கு, வார்டு உறுப்பினர் ராஜ்மனோ ஏற்பாட்டில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சுந்தரராஜன் மற்றும் அவனி நகர செயலாளர் அவனி சரவணனோடு இணைந்து, வீடு வீடாக சென்று தண்ணிர் விநியோகம் செய்துள்ளனர்.
விஜய் ரசிகர்களின் இத்தகைய செயலை பலர் பாராட்டி வருகிறார்கள்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...