Latest News :

தேசப் பற்றுக்காக ரூ.1 கோடி செலவு செய்யும் இயக்குநர் ஆர்.கண்ணன்!
Monday March-12 2018

மணிரத்னத்தின் மாணவரான இயக்குநர் ஆர்.கண்ணன், ‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, ‘இவன் தந்திரன்’ என்று தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர், தற்போது ‘பூமராங்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்க, ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, உபன் படேல், ‘மேயாத மான்’ புகழ் இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தை இயக்குவதோடு மசாலா பிக்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்யும் ஆர்.கண்ணன், இப்படத்தில் இடம்பெறும் தேசப் பற்று பாடல் ஒன்றை படமாக்க ரூ.1 கோடி செலவு செய்துள்ளார்.

 

இது குறித்து கண்ணனிடன் கேட்டதற்கு, “ஒரு முக்கியமான மற்றும் வலுவான சமுதாய கருத்தை கொண்ட ஆக்‌ஷன் படம் தான் ‘பூமராங்’. இப்படத்தில் தேசப்பற்று பாடல் ஒன்று உள்ளது. இந்த பாடலுக்காக முற்றிலும் வித்தியாசமான செட் அமைக்கலாம் என்பதற்காக ஒரு மிக பிரம்மாண்ட செட்டை அமைத்தோம். இசையமைப்பாளர் ரதன் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் எனது இந்த கனவை அழகாக புரிந்துக்கொண்டு நான் எதிர்ப்பார்த்ததை விட சிறப்பான பாடலை தந்துள்ளனர். கலை இயக்குநர் ஷிவ யாதவின் பிரம்மாண்டமான செட்டும் பிருந்தாவின் அசத்தலான நடன இயக்கத்திலும் இந்த பாடல் மேலும் சிறப்பாகியுள்ளது.

 

சுமார் 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் நமது சினிமா துறையின் சிறந்த 100 நடன கலைஞர்கள் இந்த பாடலில் உள்ளனர். ‘பூமராங்’ படத்தின் மற்றொரு சிறப்பம்சம் ‘மேயாத மான்’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த பெயர் வாங்கிய இந்துஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தான். மிகவும் சவாலான கதாபாத்திரம் அது. அந்த வேடத்தில் நடிக்கும் நடிகையர் தேர்வு நடக்கும் போது, என் குழுவினர் அனைவரின் ஏகோபித்த தேர்வு இந்துஜா தான். அந்த அளவுக்கு முதல் படத்திலேயே இந்த பெயர் வாங்கியது பெரிய விஷயம். திட்டமிட்டபடியே செயல் புரிந்தததால் படப்பிடிப்பு மிக வேகமாகவும், அருமையாகவும் நடந்து வருகிறது.” என்றார்.

Related News

2162

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery