Latest News :

சிகா (SICA) 4K டிஜிட்டல் சினிமா பயிற்சி முகாம்!
Monday March-12 2018

பல்வேறு வகையான டிஜிட்டல் சினிமா கேமராக்கள் மற்றும் ஒளியின் முக்கிய கோட்பாடுகளுடன் விரிவுரைகள், செய்முறைகள் மற்றும் நேரடி- பயிற்சி ( ஆங்கில மற்றும் தமிழ் இருமொழிகளிலும்), SICA-வினால் BOFTA திரைப்படக் கல்லூரியில் மார்ச் 10, 2018 அன்று நடைபெற்றது.

 

சுமார் 70 உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

 

பொருளாளர் ஆர்.எம்.ராம்நாத் ஷெட்டி, துணை செயலர். ஸ்ரீதர் ஜனார்த்தனன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.கார்த்திக் ராஜா, டி.கன்னன் மற்றும் BOFTA  நிறுவனர். தனஞ்சனன் ஆகியோர் முன்னிலையில் இந்த பயிற்சி திட்டம் SICA யின் தலைவர் P.C.ஸ்ரீராம், பொதுச்செயலர் B.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தனர்.

 

முதன் முதலாக ஒளிப்பதிவாளரும், எழுத்தாளருமான CJ ராஜ்குமார் பயிற்சி வகுப்பெடுத்தார். அவரைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர். கிச்சாஸ், ஒளிப்பதிவாளர். மகேஷ் முத்துசாமி, விரிவுரையாளர் கௌரி சங்கர், மற்றும் விரிவுரையாளர் நாரயனண் குமார் அவர்களும் பயிற்சி வகுப்பெடுத்தனர்.

 

மதிய உணவுக்கு பிறகு, 10 வகையான உயர் வகை தொழில்நுட்பம் கொண்ட சினிமா கேமராக்கள் மற்றும் உயர்வகை தொழில்நுட்பம் கொண்ட DSLR வகை கேமராக்களும் பயன்படுத்தப்பட்டது.

 

நேரடி- பயிற்சியில் பயன் படுத்தப்பட்ட கேமராக்கள்:

 

Red Epic/Dragon

Arri Alexa XT

Black magic ursa mini pro 4.6k (NAB Award Winner)

Sony A7SII

Pansaonic Varicam

Panasonic EVA-1

Panasonic GH5 & GH5S

இவற்றுடன்  Carl Ziess மற்றும் Sigma சினிமா லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டது.

 

மதிப்பிடும் செயல்பாடு:

 

இது போன்று பல்வேறு பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்காக SICA-வுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அதன் உறுப்பினர்களுக்கு நன்மை பயக்கும் பணியை மேற்கொள்வதற்கு ஒப்புக் கொண்ட SICA யின் தலைவர் P.C.ஸ்ரீராம் முன்னிலையில், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பூர்த்தி செய்யப்பட்ட SICA சான்றிதழ் எடிட்டர்.திரு.B.லெனின் அவர்களால் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் ஏற்பாடு செய்வதற்கான SICA குழுவின் உறுப்பினர்களுக்கு பொதுச் செயலாளர் திரு.B.கண்ணன் அவர்கள் இடமளித்து உதவிய BOFTA திரைப்படக்கல்லூரியின் நிறுவனர் திரு. தனஞ்ஜெயன் அவர்களுக்கும், ஆனந்த் சினி சர்வீஸ், Anand cine service, Adnt Ratna , Panasonic, Carl Zeiss ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

Related News

2164

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக மீண்டும் களம் இறங்கும் ரமீஸ் ராஜா!
Friday September-12 2025

’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...

Recent Gallery