தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வந்த ஆர்.கே.சுரேஷ், தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். வில்லன், ஹீரோ என்று இரண்டு விதமான கேரக்டர்களில் நடித்து வரும் அவர் தற்போது ‘அட்டு’ கூட்டணியுடன் சேர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான ‘அட்டு’ திரைப்படம் பரவலான கவனம் பெற்றது. இத்திரைப்படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா, தற்போது ஆர்.கே.சுரேஷை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘டைசன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
’பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ ஆகியப் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ், இதுவரை ஏற்றிராத ஒரு வேடத்தை ‘டைசன்’ படத்தில் ஏற்றிருக்கிறாராம். மேலும் ‘அஃகு’ படத்தின் நாயகன் அஜய், இப்படத்தில் இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ‘டைசன்’ படத்தை அதிக பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிக்கிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...