இணையத் திருட்டிற்கு சவால் விடும் ’கிரிஷ்ணம்’!
Thursday March-15 2018

பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் திரைப்படம் ’கிரிஷ்ணம்’. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்‌ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விருவிருப்பான சம்பவங்களே “கிரிஷ்ணம்” படத்தின் கதை. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி  இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு. இவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

 

மனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களேற்று நடிக்கிறார்கள். ஹரி பிரசாத்தின் இசையில் பாடல்களை சந்தியா எழுதுகிறார்.

 

’கிரிஷ்ணம்’ ஒரு புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது. வாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வுகளைச் சந்திக்கும் ஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்பே இந்த ’கிரிஷ்ணம்’ திரைப்படம். உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் கதையோடு தொடர்புடைய நபரே இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது இப்படத்தின் சிறப்பு. படத்தின் ஒவ்வொரு காட்சியுமே ரசிகர்களை இருக்கையின் நுணிக்கே இட்டுச் செல்லும் பரபரப்பு மிக்க ’கிரிஷ்ணம்’ எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

 

மேலும் தற்போது சினிமா உலகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் இணையத் திருட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவிலேயே ம்தல் முறையாக டி.ஆர்.எம் தொழில்நுட்பம் பயன்படுத்தபட உள்ளது.

 

இந்த டி.ஆர்.எம் (Digital Rights Management) தொழிற்நுட்பத்தினால் இணையதளத்தில் திருட்டுத் தனமாய் வெளியிடுவதை பெருமளவிற்குத் தடுக்க முடியும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Related News

2175

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery