Latest News :

சிரியா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏ.பி.ஸ்ரீதர்!
Thursday March-15 2018

ஒரு தாய்நாடானது இரக்கம் மற்றும் ஏற்புத்தன்மையுடன் இருப்பதாய் விளங்க வேண்டும். குறிப்பாக, அது கலவரங்கள் ஏற்படுகிற வேளையில் ஓர் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பினைத் தரும் ஓர் இடமாக இருத்தல் வேண்டும்.

 

ஆனால் அந்தத் தாய்நாடே உங்களை முழுதாக விழுங்கக் காத்திருக்கும் ஒரு யுத்தக் களமாக மாறினால் என்னாகும்?. கால்கள் சோர்ந்துபோகும் வரையில் ஓட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. நாம் முன்னெடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும், அமளியில் இருந்து தள்ளி வைக்கும் ஓரடியாக மாறுகிறது. இதுதான் சிரியாவின் இன்றைய நிலைமை, அங்கே சுதந்திரம் என்பதைத் தாண்டி உயிர்வாழ்வதற்கான போராட்டமே மேலோங்கி இருக்கிறது.

 

அத்தகைய சிரியாவின் தற்போதைய நிலையினை பிரதானப்படுத்தும் வகையில் பிரபல ஒவியரும், திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஏ.பி.ஸ்ரீதர் ஒரு கோட்டோவியத் தொடரை வரைந்திருக்கிறார். அந்தத் தொடரானது, சிரியா மக்களுக்கான உதவிக் கரங்களுக்கு ஓர் அழைப்பை விடுத்துள்ளது. இந்த சமூகத்தின் ஒரு பகுதி தொலைத்துவிட்ட மனிதாபிமானம் மற்றும் இரக்ககுணம் போன்றவற்றிற்கான கவன ஈர்ப்பை கேட்டுள்ளது. இவரது ஓவியங்கள் துயரத்தைப் பேசுவதுடன்,  உடைந்து கிடக்கும் தேசமொன்றினைக் குணப்படுத்தும் முயற்சியில் உதவிக்கான அவசரத் தேவையை அறிவுறுத்துகிறது. அது மட்டுமல்லாமல், இந்த உலகத்தில் இருத்தலுக்கான மனித இனத்தின் போராட்டத்தினைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

Related News

2177

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

”‘கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” - டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி
Friday June-14 2024

விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது...