மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு 9 மணிக்கு மேல் நகரத்தின் முக்கிய சாலைகள் மட்டும் இன்றி, சிறு சிறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி, நேற்று இரவு சென்னை கதீட்ரல் சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை போட்டனர். அந்த காரை பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான பி.எல்.தேனப்பன் ஓட்டி வந்தார். அப்போது அவரை போலீசார் பரிசோதித்த போது அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரது காரை பறிமுதல் செய்த போலீசார், பி.எல்.தேனப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடிகர் ஜெய் மது போதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கிய நிலையில், தற்போது தயாரிப்பாளர் மது போதையில் கார் ஓட்டி சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...