தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக உள்ள பலர் தமிழ் சினிமாவிலும் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன், ‘என் பெயர் சூர்யா என் நாடு இந்தியா’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இப்படத்தில் ராணுவ வீரனாக அல்லு அர்ஜுன் நடிக்க அவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் அதிகமான பொருட்ச் செலவில் மிக பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ளது. இதில், சரத்குமார், ஆக்ஷன் கிங் அர்ஜுன், நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்க, இவர்களுடன் சாய் குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், பொம்மன் ஹிராணி உள்ளிட்ட பல முக்கிய நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.
வி.வம்சி இயக்கத்தில், ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு விஷால் - சேகர் இசையமைக்க, ராஜீவன் கலையை நிர்மாணித்துள்ளார். வசனம் மற்றும் பாடல்களை பா.விஜய் எழுத, கே.நாகபாபு, பி.வாசு ஆகியோரது இணை தயாரிப்பில், லகடப்பாடி ஸ்ரீஷா ஸ்ரீதர் ‘ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ்’ சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...