சினிமா நடிகைகளுடன் போட்டு போடும் அளவுக்கு தமிழ் மக்களிடம் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகை வாணி போஜன். ‘தெய்வமகள்’ சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தமிழர்களின் மனதிலும் சத்யாவாகவே கம் போட்டு ஒட்டுக்கொண்டுள்ள இவரது உண்மை பெயரான வாணி போஜன் என்பதை காட்டிலும் சத்யாவாகவே இவரை பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் ரீஜ் ஆகியுள்ளது.
இந்த நிலையில், வாணி போஜன் தான் எதிர்க்கொண்ட பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதுவும் அவரது இளமை காலத்தில் நடந்த கொடுமையாம் அது.
பிரபல பத்திரிகை நடத்தும் உடைத்து பேசுவேன், என்ற கருத்து பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பல துறையைச் சார்ந்த பெண்களுடன் வாணி போஜனும் பங்கேற்றார்.
அப்போது தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து பகிர்ந்துக் கொண்டவர், தான் 4 ம் வகுப்பு படிக்கும் போது தன் தோழியை பார்க்க வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது அந்த தோழியில் அப்பா அவள் மேலே இருக்கிறார் என சொல்லி வாணி போஜனை வீட்டிற்குள் அழைத்து கதவை பூட்டிவிட்டு அவருக்கு தொந்தரவு கொடுத்தாராம்.
தனக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை, தனக்கு தெரியவில்லை. என் தோழியிடம் சொல்ல தெரியவில்லை. ஒருவேளை சொல்லியிருந்தால் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாது, சமீபத்தில் ஹாசினிக்கு நடந்த சம்பவம் போல எனக்கும் நடந்திருக்கலாம், என பேசினார்.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...