பிரபல படத்தொகுப்பாளர் அணில் மல்னாட் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 19) காலை 7.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான ‘சித்தாரா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற அணில் மல்னாட், ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘கிழக்கு வாசல்’, நாஞ்சில் பி.சி.அன்பழன் இயக்கிய ‘அய்யா வழி’ என ஏராளமான வெற்றிப் படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள அவர் சுமார் 600 க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். நந்தி விருது உள்ளிட்ட பல மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், உடல் நலக்குறைவுக் காரணமாக அணில் மல்னாட் இன்று மரணம் அடைந்தார். சென்னை குரோம்பேட்டை, பாரதிபுரம், நெல்லையப்பர் தெருவில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்கு அவரது உடல் வைக்கப்பட்டது. ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
’காமராசு’, ‘அய்யா வழி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி தயாரித்திருக்கும் நாஞ்சில் பி.சி.அன்பழகன், நேரில் சென்று அணில் மல்னாட் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் கேமராமேனும் உடன் சென்றார்.
அணில் மல்னாட்டின் இறுதிச் சடங்கு நாளை (மார்ச் 20) காலை 7 மணிக்கு குரோம்பேட்டை மையானத்தில் நடைபெற உள்ளது.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...