தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில், திடீரென்று திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தார். அவரது ரஷ்ய நாட்டு காதலரான ஆண்ட்ரோ கோஸ்சேவ்வை அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த மாதம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
பிறகு ஸ்ரேயாவின் தரப்பில் இருந்து திருமணம் செய்தி மறுக்கப்பட்டது. இருந்தாலும், மார்ச் 16, 17, 18 தேதிகளில் ஸ்ரேயாவின் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், திடீரென்று மார்ச் 12 ஆம் தேதி ஸ்ரேயா ரகசியமாக தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டார்.
அவரது இந்த நடவடிக்கை ரசிகர்களுக்கு மட்டும் அல்ல அவரது குடும்பத்தாருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. காரணம் அவர்களுக்கே தெரியாமல் இந்த திருமணம் நடந்துவிட்டதாம்.
ஸ்ரேயாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? என்று விசாரிக்கையில், அவரது அம்மா தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆம், ஸ்ரேயா ரஷ்ய நாட்டுக்காரை திருமணம் செய்வதில் அவரது அம்மாவுக்கு உடன்பாடு இல்லையாம். ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரேயாவின் காதலுக்கு அவர் தடை விதித்து வந்தாராம். மேலும், ஸ்ரேயாவி திருமண தேதி வெளியான போது, அவரது அம்மா ஸ்ரேயாவிடம் கடுமையாக நடந்துக்கொண்டதோடு, திருமணத்தை நிறுத்துவதற்கான வேலைகளிலும் ஈடுபட தொடங்கிவிட்டாராம்.
அதனால் தான் பயந்துபோன ஸ்ரேயா, திடீரென்று ரகசியமாக தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டாராம்.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...