கியூப், திரையரங்க கட்டணம், தமிழக அரசின் வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அதேபோல், கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் நடத்தவும் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு, சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திரையுலகினர் அனைவரும் ஒற்றுமையாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவது போராட்டத்தை வலுவிழக்க செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே சமயம், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் சங்கம், படப்பிடிப்புக்கு தடை விதித்தாலும், முன் கூட்டியே செட் போடப்பட்ட சில படங்கள் முன் அனுமதி பெற்று ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்ற சலுகை வழங்கப்பட்டது. காரணம், தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட்டம் ஏற்பட கூடாது என்பது தான். அதன்படி, விஜய் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட சில தயாரிப்பு நிறுவனங்கள் கடிதம் மூலம் அனுமதி கேட்டன, அந்த கடிதத்தை பரிசிலிக்கப்பட்டு சங்க நிர்வாகிகள் அனுமதி வழங்கிய பின்பே அவர்கள் படப்பிடிப்பை நடத்தினார்கள், என்று தெரிவித்துள்ளது.
என்னதான் தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்திருந்தாலும், முன்னணி ஹீரோ, முன்னணி இயக்குநர் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனம் என்பதால் தான் விஜய் படத்திற்கு படப்பிடிப்பு நடத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்படி தயாரிப்பாளர்களிடம் பாராபட்சம் காட்டப்படுவது தயாரிப்பாளர் சங்கத்திற்கு நல்லதல்ல, என்று சில தயாரிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...