Latest News :

மூன்று மொழிகளில் வெளியாகும் ‘கிருஷ்ணம்’
Tuesday August-15 2017

பி.என்.பி சினிமாஸ் தயாரிப்பில் தினேஷ் பாபு இயக்கும் படம் ‘கிருஷ்ணம்’. அறிமுக நாயகனாக அக்சய் கிருஷ்ணன், அஸ்வரியா, மமிதா பஜ்ஜு ஆகியோர் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது.

 

இப்படத்தின் இயக்குநர் தினேஷ் பாபு, ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் மலையாளம் மற்றும் கன்னடம் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 

 

ஒரு இளைஞரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ள தினேஷ் பாபு, இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க பல நடிகர்களை தேர்வு செய்தாலும், அவர்கள் யாரும் பொருத்தமானவர்களாக அமையாததால், கடைசியில் எந்த இளைஞரின் கதையை படமாக்க நினைத்தாரோ அவரையே ஹீரோவாக்கி படத்தை முடித்திருக்கிறார்.

 

நாயகன் உண்மையில் சிரித்த, அழுத நாட்களை சினிமாவுக்காக மீண்டும் ஒரு முறை கேமராவுக்கு முன்னால் நடித்தது பெரும் சவாலாக இருந்ததாம். இயக்குநர் சொல்லிக் கொடுக்கொடுக்காமலேயே சில காட்சிகளில் மிக தத்ருபமாக நடித்தாராம்.

 

உண்மை சம்பவத்தில் வாழ்ந்தவர்களை  சினிமாவுக்காக  மீண்டும் ஒருமுறை  கேமரா  முன்பு நடிக்க வைப்பது என்பது  பெரும் சவால்  அதை தான் சிறப்பாக  செய்திருப்பதாக இயக்குநர் தினேஷ் பாபு கூறினார்.

 

ஹரி நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை சந்தியா எழுதியுள்ளார். பி.என்.பல்ராம் தயாரித்துள்ள இப்படத்தை வித்தியாசமான களத்தில் தினேஷ் பாபு இயக்கியிருக்கிறார்.

Related News

222

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery