‘AAA' படத்திற்குப் பிறகு எந்த பக்கம் திரும்பினாலும் எதிர்ப்புகளையே எதிர்க்கொண்ட சிம்பு மீது அப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட பலர் பல குற்றச்சாட்டுக்களை கூறி வந்ததால், ரொம்பவே அப்செட்டாகிவிட்டார்.
இதற்கிடையே, மணிரத்னம் படத்திற்காக தன்னை தயாரிப்படுத்திக் கொண்டிருக்கும் சிம்பு, தற்போது ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறாராம். அதற்கு காரணம் யுவன் சங்கர் ராஜா தான்.
’மெட்ரோ’ புகழ் சிரிஷ் ஹீரோவாக நடிக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ என்ற படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள “நா யாருன்னு தெரியுமா” என்ற பாடலை சிம்பு பாடியிருக்கிறார். கடந்த மார்ச் 13 ஆம் தேதி வெளியான இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை இரண்டு லட்சம் பேர் யூடியுபில் இப்பாடலை பார்த்துள்ளனர்.

இந்த விஷயம் சிம்புவுக்கு புது உற்சாகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதால், ‘ராஜா ரங்குஸ்கி’ ஹீரோ சிரிஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை அழைத்து சிம்பு பாராட்டியுள்ளார். மேலும், இந்த பாட்டு போல, படமும் மிகப்பெரிய ஹிட் ஆகும், என்று அவர்களிடம் கூறி தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...